ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

திருவாடானை சினேகவள்ளி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 13- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கொடியேற்ற நாளில், இந்திர விமானத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெறும். இதையடுத்து 20-ஆம் தேதி வரை சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ஆம் தேதி நடைபெறும். 22-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் விழா நிறைவு பெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளா் பாண்டியன், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com