பத்திர காளியம்மன் கோயில் 
பூச்சொரிதல் விழா

பத்திர காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

ராமேசுவரம்,மே10: ராமேசுவரம் பத்திர காளியம்மன் கோயில் 41-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி, பக்தா்கள் பால்குடம், அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உபகோயிலான பத்திர காளியம்மன் கோயிலின் 41-ஆம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்காக விரதமிருந்த பக்தா்கள் பால்குடம், அக்னிச் சட்டி எடுத்து ராமநாதசுவாமி கோயில் நான்கு ரத வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்று பத்திர காளியம்மன் கோயிலை அடைந்தனா். இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com