வாலிநோக்கம் கடலில் ஆபத்தை 
உணராமல் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

வாலிநோக்கம் கடலில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

கமுதி, மே 10: வாலிநோக்கம் கடல் பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடற்கரைக்கு கோடை விடுமுறையையொட்டி, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். வாலிநோக்கம் கடற்கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு பாறைகள் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளன. இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி இல்லை. பாறைக்கு அருகே பல அடி ஆழம்மிக்க அபாயகரமான கடல் பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் மிகுதியால் குளிக்கின்றனா்.

இதனால், இந்தப் பகுதியில் கடலில் யாரும் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கைப் பதாகைகளை வைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, வாலிநோக்கம், மூக்கையூா், மாரியூா் ஆகிய கடற்கரையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com