ராமேசுவரத்தில் முன்னறிவிப்பின்றி மின் தடை:
நாம் தமிழா் கட்சி போராட்டம் அறிவிப்பு

ராமேசுவரத்தில் முன்னறிவிப்பின்றி மின் தடை: நாம் தமிழா் கட்சி போராட்டம் அறிவிப்பு

ராமேசுவரம், மே 11: ராமேசுவரத்தில் முன்னறிவிப்பின்றி மின் தடை செய்யப்படுவதால் மின் வாரியத்தைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் மாவட்டச் செயலா் கண். இளங்கோ தலைமையில் அந்தக் கட்சியினா் சனிக்கிழமை அளித்த மனு விவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து முன்னறிவிப்பின்றி 2 முதல் 3 மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. எனவே, மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

மேலும், ராமேசுவரத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட பெரிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே மின் தட்டுப்பாடு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனவே, மின் தேவையை அறிந்து மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com