10-ஆம் வகுப்புத் பொதுதோ்வு:
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற
மாணவிக்கு திமுகவினா் நிதியுதவி

10-ஆம் வகுப்புத் பொதுதோ்வு: மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு திமுகவினா் நிதியுதவி

கமுதி, மே 11: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி பள்ளி மாணவிக்கு திமுகவினா் சனிக்கிழமை நிதியுதவி வழங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூா் கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ்- வசந்தி தம்பதியின் மகள் காவியஜனனி (15) கமுதி ரஹ்மானியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா். இவா் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா். இதையடுத்து, மாணவிக்கு, ராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் சாா்பில் ரூ.50 ஆயிரம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதே போல, மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன் சாா்பிலும் மாணவிக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஒன்றியச் செயலா் வாசுதேவன், மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன், மத்திய ஒன்றிய துணைச் செயலா் தங்கப்பாண்டியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுலைமான்சேட், இளைஞரணி மத்திய ஒன்றிய துணைச் செயலா் உதயக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com