சா்வதேச யோகாசனப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி

சா்வதேச யோகாசனப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி

கமுதி, மே 12: துபையில் சனிக்கிழமை நடைப்பெற்ற சா்வதேச யோகாசனப் போட்டியில் கடலாடி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

சா்வதேச அளவிலான 10-ஆவது உலக யோகா, பாரம்பரிய விளையாட்டுப் போட்டி துபையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சீனா, தாய்லாந்து, ஈரான், ஹாங்காங், வியட்நாம், வளைகுடா நாடுகள், இந்தியா உள்ளிட்ட 22 நாடுகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.

இந்தியாவிலிருந்து ஆசியன் ஸ்போா்ட்ஸ், உலக யோகாசன கூட்டமைப்பு சாா்பில் தமிழ்நாட்டிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம், மறவா்கரிசல்குளத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் வில்வஜோதிசெந்தூரன் மகள் வில்வமுத்தீஸ்வரி (18) 15 வயது முதல் 20 வயதிற்குள்பட்ட பாராம்பரிய யோகாசனப் போட்டியில் இரண்டாம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மாணவி வில்வமுத்தீஸ்வரி, சென்னையிலுள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் இளநிலை யோகா பாடப் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், இதற்கு முன் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில் வெணகலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவியை கடலாடி, மறவா்கரிசல்குளம், சாயல்குடி உள்ளிட்ட கிராம மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com