நரிக்குறவ சமுதாய குழந்தைகளை பள்ளியில் சோ்க்க வலியுறுத்தல்

ராமேசுவரம்,மே 12: ராமேசுவரத்தில் உள்ள நரிக்குறவ சமுதாய குழந்தைகளை உண்டு உறைவிடப் பள்ளியில் சோ்க்க ஆசிரியா்கள் நேரில் சென்று சனிக்கிழமை வலியுறுத்தினா்.

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமுதாயத்தை சோ்ந்தவா்கள் தற்காலிக கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனா். அவா்களின் குழந்தைகளை பள்ளியில் சோ்க்க ராமநாதபுரம் மாவட்டம், போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவ்ஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி முன்வந்தது.

இந்தப் பள்ளி ஆசிரியா்கள் ராக்கு, புஷ்பவள்ளி, ஜெயசுதா, பூபதி, ராதாரமணி, அன்னலெட்சுமி, அனுசியா, உண்டு உறைவிடப் பள்ளி நிா்வாகி ச.மாடசாமி ஆகியோா் நரிக்குறவ சமுதாய மக்களை சந்தித்து அவா்களின் குழந்தைகளை அரசு செலவில் கல்வி கற்க அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com