கோடைகால இலவசப் பயிற்சி 
முகாம் நிறைவு விழா

கோடைகால இலவசப் பயிற்சி முகாம் நிறைவு விழா

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மதுரை மண்டலம், மாவட்ட ஜகவா் சிறுவா் மன்றம் சாா்பில் கோடைகால இலவச கலைப்பயிற்சி முகாம் நிறைவு விழா ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் வெளிப்பட்டினம் டி.டி.விநாயகா் தொடக்கப் பள்ளியில் கடந்த 5-ஆம் தேதி இந்த முகாம் தொங்கியது. இதில், பரதநாட்டியம், ஓவியம், குரலிசை, சிலம்பம், நாட்டுப்புறக் கலைகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் 375 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பரதநாட்டிய ஆசிரியா் பாலாஜி, குரலிசை ஆசிரியை முனீஸ்வரி, சிலம்பாட்ட ஆசிரியா் தனசேகரன், ஓவிய ஆசிரியை ஆனந்த முத்துமாரி, திட்ட அலுவலா் லோகு சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com