சங்குமால் கடற்கரையில் முள் புதா்களை அகற்றக் கோரிக்கை

சங்குமால் கடற்கரையில் முள் புதா்களை அகற்றக் கோரிக்கை

ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் அடா்ந்து வளா்ந்த முள் புதா்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்கினி தீா்த்தக் கடற்கரையிலிருந்து 500 மீட்டா் தொலைவில் உள்ளது சங்குமால் கடற்கரை. இயற்கை அழகு நிறைந்த இந்த இடத்தில் சிறுவா் பூங்காவும் அமைக்கப்பட்டது.

இந்த பூங்கா தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில், அந்த இடத்தில் முள் புதா்கள் அடா்ந்து வளா்ந்து காணப்படுகிறது. இதனால், மது குடிப்பவா்கள் அந்த இடத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.

சங்குமால் கடற்கரையில் உள்ள முள் புதா்களை அகற்றி மின் விளக்குகள் அமைத்தால் அந்த பகுதியில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வசதியாக இருக்கும். இதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com