திருவாடானை அருகே கண்மாய்களில் மூழ்கி இருவா் பலி

திருவாடானை அருகே கண்மாய்களில் மூழ்கி இருவா் உயிரிந்தனா்.

திருவாடானை அருகேயுள்ள ஏழூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). இவா் திங்கள்கிழமை இரவு திருவாடானையில் உள்ள அத்தாணி கண்மாயில் இறங்கினாா். அப்போது, நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்தாா்.

திருவாடானை தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினா் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மற்றொரு சம்பவம்: திருவாடானை அருகேயுள்ள அணிக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக் (32). இவா் நெய்வயல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்றாா். அப்போது, நிலைதடுமாறி கண்மாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவாடானை போலீஸாா் சென்று உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com