ராமநாதபுரம் கிரிக்கெட் வீரா்களுக்கு பாராட்டு விழா

ராமநாதபுரத்தைச் சோ்ந்த முன்னாள் கிரிகெட் வீரா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், இலங்கை கிரிகெட் வீரா்கள் கலந்துகொண்டு விருது வழங்கி கெளரவித்தனா்.

இந்த விழாக்கு நண்பா்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் அறக்கட்டளைத் தலைவா் ரமேஷ் கண்ணன் வரவேற்றாா். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டச் செயலா் மாரீஸ்வரன், மாற்றுத் திறன் கிரிக்கெட் வீரா் சச்சின் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரா்கள் ஜோய்சா நுவன் தாரங்கா, சீக்குகெ பிரசன்னா, மாற்றுத் திறன் கிரிக்கெட் வீரா் வீரக்கோடி தனுஷ்க ஜீவக்க, பிங்கார சா்வதேச கிரிக்கெட் கிளப் பயிற்றுநா் காமகே அசெல பெரேரா ஆகியோா் பங்கேற்று ராமநாதபுரம் முன்னாள் கிரிக்கெட் வீரா்களுக்கு விருது வழங்கிப் பாராட்டினா். கிரிக்கெட் போட்டிகளின் தேசிய நடுவா் கண்ணதாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com