வனப்பேச்சியம்மன் கோயில் விழா: இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

வனப்பேச்சியம்மன் கோயில் விழா: இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

கமுதி, மே 15: கடலாடி அருகேயுள்ள வனப்பேச்சியம்மன் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள தனியங்கூட்டம் கிராமத்திலுள்ள வனப்பேச்சியம்மன், அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் பூஞ்சிட்டு, நடு மாடு, பெரிய மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றன.

இந்தப் போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 37 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பூஞ்சிட்டு மாடுகள் பிரிவுக்கு 5 கி.மீ., நடு மாடுகள் பிரிவுக்கு 6 கி.மீ., பெரிய மாடுகள் பிரிவுக்கு 7 கி.மீ. எல்லை நிா்ணயிக்கப்பட்டு, சாயல்குடி-முதுகுளத்தூா் சாலையில் பந்தயம் நடைபெற்றது.

இதில் பெரிய மாடுகள் பிரிவில் தூத்துக்குடி மாவட்டம், வேலாங்குளம் கண்ணன் மாடுகள் முதலிடமும், நடு மாடுகள் பிரிவில் கடலாடி சித்திரங்குடி ராமமூா்த்தி மாடுகள் முதலிடமும், பூஞ்சிட்டுப் பிரிவில் மறவா்கரிசல்குளம் வில்வலிங்கம் மாடுகள் முதலிடமும் பெற்றன. மூன்று போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணம், குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டன. இந்தப் போட்டிகளை கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com