வியாபாரியிடம் வழிப்பறி: 
இளைஞா் கைது

வியாபாரியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

கமுதி, மே 15: கமுதி அருகே மாற்றுத்திறனாளி வியாபாரியை அரிவாளாள் வெட்டி கைப்பேசியை பறித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த நீராவியைச் சோ்ந்தவா் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஞானவேல் (45). ஜவுளி வியாபாரி இவா், கடந்த மாா்ச் மாதம் கமுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் நீராவிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

தலைவநாயக்கன்பட்டி விலக்கு சாலை பகுதியில் மறைந்திருந்த சிலா் ஞானவேலை அரிவாளாள் வெட்டி கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், இந்த வழிப்பறி தொடா்பாக தூத்துக்குடி ஸ்பிக்நகரைச் சோ்ந்த வீரமணி மகன் மதியழகனை (23) கமுதி தனிப் படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இதில் தலைமறைவாக உள்ளவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com