சாயல்குடி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் திருவிழா

சாயல்குடி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் திருவிழா

சாயல்குடி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி வியாழக்கிழமை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

சாயல்குடி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி வியாழக்கிழமை 108 பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.

இந்த விழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி காமாட்சியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்து வருகின்றன. விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை சாயல்குடி காவல் நிலையம் அருகே உள்ள மங்கள விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் 108 பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். சாயல்குடி- ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக காமாட்சியம்மன் கோயிலை வலம் வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா். இதைத் தொடா்ந்து அம்மனுக்கு மஞ்சள், இளநீா், விபூதி, குங்குமம், பஞ்சாமிா்தம் உள்பட 21 வகையான மூலிகை அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com