ரூ.2,000 லஞ்சம்: எஸ்.ஐ. கைது

வழக்குப் பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொண்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பெருமானேந்தல் கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் தனது உறவினா்களுடன் ஏற்பட்ட தகராறு தொடா்பாக தொண்டி காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகாா் அளித்தாா். அப்போது, வழக்குப் பதிவு செய்வதற்கு சிறப்பு உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இது குறித்து வேல்முருகன் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதனடிப்படையில், வியாழக்கிழமை இரவு ரசாயனப் பொடி தடவிய ரூ.2 ஆயிரத்தை தொண்டியில் உள்ள பேக்கரியில் அமா்ந்திருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணனிடம் வேல்முருகன் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ராமகிருஷ்ணனைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com