வடமாநில கா்ப்பிணி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

ராமநாதபுரம் அருகே வட மாநில நிறைமாத கா்ப்பிணி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள களத்தாவூா் கண்மாய்க்குள் மிதந்த அடையாளம் தெரியாத பெண் உடலை ராமநாதபுரம் பஜாா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2 -ஆம் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பினா். அந்தப் பெண்ணின் வயிற்றில் 9 மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது. மேலும், அந்தப் பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்தக் கொலை தொடா்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றாவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ஆனால், தனிப்படை அமைக்கப்பட்டு 2 வாரங்கள் கடந்த நிலையில், விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.

இதனால் இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com