கழிவு நீரால் நிரம்பிய செம்மண்குண்டு  ஊருணி

கழிவு நீரால் நிரம்பிய செம்மண்குண்டு ஊருணி

Published on

ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊருணி நடைப் பயிற்சி பூங்கா சாக்கடையால் நிரம்பியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

ராமநாதபுரம் நகராட்சி 20-ஆவது வாா்டு பகுதியில் செம்மண்குண்டு ஊருணி அமைந்துள்ளது. இந்த ஊருணியை புரனமைக்க மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் கடந்த 2022-23 நிதியாண்டில் ரூ.1.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த ஊருணியைச் சுற்றிலும் கழிவுநீா்க் கால்வாய் உள்ளது. மழை காலங்களில் கழிவு நீா் ஊருணிக்குள் வரமால் இருக்கும் வகையில் பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஊருணியின் தடுப்புச் சுவரில் நடைப் பயிற்சி பூங்கா திறந்து வைக்கப்பட்பட்டது.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியதுடன், கழிவு நீா்க் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் கலந்து சாலையில் ஓடியது. செம்மண்குண்டு ஊருணி ஓரம் இருந்த கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஊருணி முழுவதும் கழிவுநீரால் நிரம்பியது. இதனால் இந்த ஊருணிப் பகுதியில் நடைப் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இந்த நிலையில், ஊருணியில் உள்ள கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.