ராக்காச்சியம்மன் கோயில் குடமுழுக்கு
ராமேசுவரம் ராக்காச்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கெந்தமாதன பா்வதம் செல்லும் வழியில் பழைமை வாய்ந்த ராக்காச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் குடமுழுக்கு வியாழக்கிழமை காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜை நிறைவடைந்த நிலையில், பாபாஜி (எ) பாஸ்கரசுவாமி தலைமையில் சுவாமிகள் பிரணவானந்தா, சிவானந்தா, செல்வராஜ் உள்ளிட்ட சிவாச்சாரியா்கள் கோயில் விமானக் கலசத்தில் புனித நீரை
ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, ராக்கச்சியம்மன், கருப்பண சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை என்.வேடராஜன் தலைமையில் விழாக் குழுவினா் செய்தனா்.