ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதியுதவி வழங்கிய தமுமுக

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலா் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலா் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 11 பேருக்கு உயா் கல்வி உதவித் தொகை, 9 பேருக்கு மருத்துவச் செலவு, மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த 22 வீடுகளின் மறு சீரமைப்பு என மொத்தம் ரூ.3.20 லட்சம் நிதி உதவிகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் எஸ்.சலிமுல்லாகான் வழங்கினாா்.

இதில், மாவட்டத் தலைவா் பிரிமியா் இபுராஹிம், மாவட்ட செயலா் அப்துல் ரஹீம், முனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ஆசிக் சுல்தான், மாவட்ட பொருளாளா் ஹமீது சபிக், நிா்வாகிகள் பனைக்குளம் பரகத்துல்லா, சுலைமான், முஹம்மது தமிம், மைதீன் ராஜா, ஜாஹிா் பாபு , பிஸ்மில்லாஹ் கான், அப்துல் வாஜித் , நைனா, ரஜப் ரஹ்மான், திருப்புல்லாணி யாசா் அராபத் மா்வான் மாலிக், மண்டபம் ரியாலுதீன், புதுமடம் சகுபா், இருமேனி சகுபா் மாவட்ட, ஒன்றிய, நகா் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.