ராமேசுவரம் மீனவா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் வி.பி. ஜேசுராஜா தலைமை வகித்தாா். மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், ஆல்வின், தட்சிணாமூா்த்தி, கே.சி. முருகன், ஜொ்மியான்ஸ் உள்ளிட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்களையும், விசைப் படகுகள், நாட்டுப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை-இந்திய மீனவா்கள் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும்.

தமிழக மீனவா்கள் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட பகுதியில் மீன்பிடிப்பதற்கான உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி, புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, வருகிற 3-ஆம் தேதி தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com