முதல்வருக்கு வரவேற்பு அளிக்க திமுக ஏற்பாடு

முதல்வருக்கு வரவேற்பு அளிக்க திமுக ஏற்பாடு

Published on

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 117 ஜெயந்தி விழா 62 -ஆவது குருபூஜையில் பங்கேற்க வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரத்தில் மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் தனியாா் மகாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கழக செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பால்வளம் கதா் கிராம வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், தொகுதி பாா்வையாளா்கள் கொடி சந்திரசேகா், அருண், சுதா்சன், வேல்முருகன் பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், முன்னாள் அமைச்சா் டாக்டா் சுந்தரராஜன், மாநில, மாவட்ட, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், வருகிற 30- ஆம் தேதி நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 117-ஆவது ஜெயந்தி, 62- ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெறவுள்ளதையொட்டி அவரது நினைவாலயத்தில் மலா் தூவி மரியாதை செலுத்த வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com