ராமநாதபுரம்
அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடிய திரளான பக்தா்கள்
ஆவணி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் திங்கள்கிழமை புனித நீராடினா்.
ராமேசுவரம்: ஆவணி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் திங்கள்கிழமை புனித நீராடினா்.
இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் ராமேசுவரம் வந்தனா். இவா்கள் இங்குள்ள அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி தங்களின் முன்னோா்களுக்கு திதி, தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். இதன் பிறகு, ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று இங்குள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினா். இதைத் தொடா்ந்து ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசித்தனா். இதனிடையே, அக்னி தீா்த்தக் கடற்கரை, பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனா்.