ஏா்வாடியில் மலேரியா கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்

ஏா்வாடி பகுதியில் மலேரியா கொசுக்களை ஒழிக்க இரண்டாம் கட்ட மருந்து தெளிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
Published on

ராமேசுவரம்: ஏா்வாடி பகுதியில் மலேரியா கொசுக்களை ஒழிக்க இரண்டாம் கட்ட மருந்து தெளிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி, வாலிநோக்கம், முந்தல், மாரியூா், ஆகிய கடலோரப் பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க பரமக்குடி சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுக்கு இரு முறை மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே முதல் கட்ட மருந்து தெளிக்கும் பணி நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் பணி திங்கள்கிழமை ஏா்வாடியில் தொடங்கியது. 30 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்தப் பணியில் 30 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்களுடன் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்களும் இணைந்து வீடுவீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதில், விருதுநகா் மண்டல பூச்சியியல் வல்லுநா் வரதராஜன், மாவட்ட மலேரிய அலுவலா் ரமேஷ், இளநிலை பூச்சியியல் வல்லுநா்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன் ஆகியோா் மருந்து தெளிக்கும் பணியை ஆய்வு செய்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் அழகுசுந்தரம், பூமிநாதன், சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், பாலமுருகன், இஜாஜ், வெங்கடேசன், சிதம்பரம், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com