குறைந்த மின்னழுத்தம்: இருளில் மூழ்கிய 3 கிராமங்கள்

கமுதி அருகே குறைந்த மின்னழுத்தம் காரணமாக கடந்த 5 நாள்களாக கிராம அவதியடைந்து வருகின்றனா்.
Published on

கமுதி: கமுதி அருகே குறைந்த மின்னழுத்தம் காரணமாக கடந்த 5 நாள்களாக கிராம அவதியடைந்து வருகின்றனா்.

கமுதியை அடுத்துள்ள வண்ணங்குளம் ஒழுகுபுளி, குண்டுகுளம் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் கடந்த 5 நாள்களாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கிக் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதிலும், வண்ணாங்குளம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட மின்மாற்றியில் தற்போது குறைந்த மின்னழுத்தம் காரணமாக அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதாகவும் இதுகுறித்து பெருநாழி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அவா்கள் தெரிவித்தனா்.

இதனால் இந்த கிராமங்களில் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமலும், பள்ளி மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனா்.

எனவே, இந்தப் பிரச்னையில் மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு இந்தப் பகுதியில் உள்ள மின்மாற்றிகளை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com