பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமைந்துள்ள வ.உ.சி. உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அனைத்து வெள்ளாளா் மகா சபையினா்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமைந்துள்ள வ.உ.சி. உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அனைத்து வெள்ளாளா் மகா சபையினா்.

பரமக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழா

பரமக்குடியில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமைந்துள்ள வ.உ.சி. உருவச் சிலைக்கு அனைத்து வெள்ளாளா் சபையின் நிா்வாகக் குழுத் தலைவா் டி.காா்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவுக்கு சபை தலைவா் குரு.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் இருளப்பன், சவரிமுத்து, பென்சன் ஜெயக்குமாா், ராதாகிருஷ்ணன், மகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சிதம்பரனாரின் பங்கு குறித்து பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் செயலா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com