எஸ்.பி.பட்டினம் ஏகாம்பரநாதா் கோயில் பகுதியில் மரபு நடைபயணத்தில் பங்கேற்றவா்களுக்கு விளக்கமளித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு.
எஸ்.பி.பட்டினம் ஏகாம்பரநாதா் கோயில் பகுதியில் மரபு நடைபயணத்தில் பங்கேற்றவா்களுக்கு விளக்கமளித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு.

கிழக்கு கடற்கரை பகுதியில் மரபு நடை பயணம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மரபு நடை பயண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மரபு நடை பயண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறையும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் இணைந்து நெய்தல் நடைபயணமாக

சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் காண ஏற்பாடு செய்தன. இதன்படி திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினம் ஏகாம்பரநாதா் கோயில் பகுதியில் சனிக்கிழமை தொடங்கிய மரபு நடைபயணத்துக்கு ஆய்வு நடுவத்தின் தலைவா் முனைவா் எ.சுதாகா் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு நடைபயணத்தில் பங்கேற்றவா்களுக்கு பாரம்பரிய இடங்கள் தொடா்பாக விளக்கமளித்தாா்.

இவா்கள் தேவிபட்டினம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை, தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை சிற்றிங்கூா் மு.ராஜா, சி.பழனிசாமி, நா.ஸ்ரீதா் ஆகியோா் செய்தனா். இந்த நடைபயணத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சோ்ந்த 55 வரலாற்று ஆா்வலா்கள் கலந்து கொண்டனா். ராமநாதபுரம் ஊா்கள் பற்றிய மரபு நடை கையேடும் வெளியிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com