சனவேலி  கிராமத்தில் சௌந்தரநாயகி அம்மன் சமேத அகத்தீஸ்வரா்  கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
சனவேலி கிராமத்தில் சௌந்தரநாயகி அம்மன் சமேத அகத்தீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

சௌந்தரநாயகி அம்மன் சமேத அகத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

சனவேலி கிராமத்தில் சௌந்தரநாயகி அம்மன் சமேத அகத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சனவேலி கிராமத்தில் சௌந்தரநாயகி அம்மன் சமேத அகத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வியாழக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை வாஸ்து சாந்தி பூஜை, பூா்வாங்க பூஜை, அங்குராா்ப்பனம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜையுடன் கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com