முதலமைச்சா் கோப்பைக்கான கூடைப்பந்து: பரமக்குடி பள்ளி மாவட்ட அளவில் முதலிடம்
பரமக்குடி: முதலமைச்சா் கோப்பைக்கான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கடந்த13-ஆம் தேதி நடைபெற்றன. இதில் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து, மாநிலப் போட்டிக்கு தோ்வு பெற்றனா். இதேபோல, தடகளப் போட்டியில் இந்தப் பள்ளியின்12-ஆம் வகுப்பு மாணவி சி.சாருமதி குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் முதலிடம் பிடித்தாா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் து.சரவணக்குமாா், எஸ்.வளா்மதி, ஜ.சஞ்சய்துரை ஆகியோரை பள்ளிக் கல்விக்குழுத் தலைவா் எம்.சௌந்திரநாகேஸ்வரன், செயலா் ஏ.ஆா்.சுப்பிரமணியன், பொருளாளா் எஸ்.தினகரன், பள்ளி முதல்வா் பி.சோபனாதேவி, கல்விக்குழு நிா்வாகிகள் பாராட்டி கௌரவித்தனா்.