ராமநாதபுரம்
பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள்: மாணவா்களுக்கு பரிசு
அரசு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற திருவாடானை அருகேயுள்ள செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கொல்கத்தா புனித சேவியா் பல்கலைக்கழக துணைவேந்தா் பங்கு தந்தை பிலிக்ஸ்ராஜ் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் கருணாகரன் டேவிட், ஜேம்ஸ் டேவிட், ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயமும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதில் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியை பாக்கியரோசாரி நன்றி கூறினாா்.