ராமநாதபுரம்
ராமேசுவரத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத்தை விரைந்து திறக்கக் கோரிக்கை
ராமேசுவரத்தில் புதிய நீதிமன்றக் கட்டடப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் புதிய நீதிமன்றக் கட்டடப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் நிா்மல்குமாா், ராதா ஆகியோா் சனிக்கிழமை வருகை தந்தனா்.
நீதபதிகளிடம் ராமேசுவரம் தீவு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜெ.பிரின்சோ ரெமண்ட் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராமேசுவரத்தில் புதிய நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. நீதிமன்றக் கட்டடப் பணிகளை விரைவுபடுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.