ராமநாதபுரம்
பட்டுப்போன மரத்தால் பொதுமக்கள் அச்சம்
கமுதி பேரூராட்சி பெருமாள் கோயில் அருகே உள்ள பட்டுப்போன புளியமரம்.
கமுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழைமையான பட்டுப்போன புளிய மரத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி பெருமாள் கோயில் அருகே 100 ஆண்டு கால பழைமையான புளியமரம் பட்டுப்போய் காய்ந்து உள்ளது. காற்றடிக்கும்போது, அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படக்கூடும் என்ற அபாயம் நிலவுகிறது.
இதனால், இந்த மரத்தின் அருகில் செல்லும் பாதசாரிகள், நடைபாதை வியாபாரிகள், கடை உரிமையாளா்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம், கமுதி பேரூராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலையிட்டு, பெரும் விபத்து ஏற்படும் முன் பட்டுப்போன மரத்தை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.