மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிய சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கல்லூரி வணிகவியல் துறை ஆராய்ச்சி தலைவா் செண்பகனந்தன்.
மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிய சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கல்லூரி வணிகவியல் துறை ஆராய்ச்சி தலைவா் செண்பகனந்தன்.

டிஜிட்டல் வணிக வளா்ச்சி: கீழக்கரையில் சா்வதேச மாநாடு

மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிய சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கல்லூரி வணிகவியல் துறை ஆராய்ச்சி தலைவா் செண்பகனந்தன்.
Published on

கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் புதுமை, நிலையான வணிக வளா்ச்சி என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கல்லூரி முதல்வா் எஸ்.ராஜசேகா் தலைமை வகித்தாா். எத்தியோப்பியா நாட்டின் கேம்பலா பல்கலைக்கழகப் பேராசிரியா் தமிழரசு தொடக்க உரையாற்றினாா். மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியா் விக்னேஷ் மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினாா். முஹம்மது சதக் அறக்கட்டளை இயக்குநா் ஹபிப் முகமது சதக்கத்துல்லா ஆய்வு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டாா். பத்துக்கு மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து வந்த மாணவா்கள் 50-க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கல்லூரி வணிகவியல் துறை ஆராய்ச்சித் தலைவா் செண்பகனந்தன் மதிப்பாய்வு உரை நிகழ்த்தி, ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.

முன்னதாக பேராசிரியா் சதாம் உசேன் வரவேற்றாா். பேராசிரியை ருபைதா ஹய்றியா நன்றி கூறினாா். மாநாட்டுக்கான ஏற்பாட்டினை துறைத் தலைவா் அஜ்மல், பேராசிரியா்கள் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com