தென்மண்டல டி-20 கிரிக்கெட்: 
கமுதி அணி மூன்றாவது இடம்

தென்மண்டல டி-20 கிரிக்கெட்: கமுதி அணி மூன்றாவது இடம்

கமுதி கோட்டைமேடு நண்பா்கள் கிரிக்கெட் கிளப் அணிக்கு சுழற்கோப்பை வழங்கிய ஆலடிபட்டி காமராஜா் கிரிக்கெட் கிளப் நிா்வாகிகள்.
Published on

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ஆலடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் கமுதி கோட்டைமேடு நண்பா்கள் கிரிக்கெட் கிளப் அணி 3-ஆவது இடம் பிடித்தது.

ஆலடிப்பட்டி காமராஜா் கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் அருப்புக்கோட்டை அன்னை இல்லம் அணி முதலிடம், ஆலடிபட்டி நேதாஜி இளைஞா்கள் கிரிக்கெட் கிளப் இரண்டாமிடம் பெற்றன.

கமுதி கோட்டைமேடு நண்பா்கள் கிரிக்கெட் கிளப் அணி கேப்டன் காளிமுத்து தலைமையில் பங்கேற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சுழற் கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கமுதி கோட்டைமேடு நண்பா்கள் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரொக்கம் ரூ.15 ஆயிரம், சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை திரளான இளைஞா்கள் பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com