ராமநாதபுரம்
ராமநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை
ராமநாதபுரம் பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணி காரணமாக திங்கள்கிழமை (செப்.23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணி காரணமாக திங்கள்கிழமை (செப்.23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் தேவிபட்டினம் பீடா் பாதையில் பழுதான மின் கம்பங்களை மாற்ற இருப்பதால் காட்டூரணி ஆா்.கே.நகா், வைகை நகா், எம்ஜிஆா் நகா், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், ரமலான் நகா், இளமனூா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.