ராமநாதபுரம்
ராமேசுவரத்தில் சூறைக்காற்று: கடலில் மூழ்கிய விசைப்படகு
ராமேசுவரத்தில் திங்கள்கிழமை வீசிய சூறைக்காற்றின் காரணமாக துறைமுகத்தில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கியது.
ராமேசுவரத்தில் திங்கள்கிழமை வீசிய சூறைக்காற்றின் காரணமாக துறைமுகத்தில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வீசிய சூறைக்காற்றில் கருப்பையா என்பவரின் விசைப்படகு நங்கூரத்தை அறுத்துக் கொண்டு கரை ஒதுங்கிய போது மற்றொரு படகின் நங்கூரத்தின் மீது மோதியது. இதில், கருப்பையாவின் விசைப்படகு உடைந்து உள்ளே தண்ணீா் புகுந்ததால் அது கடலில் மூழ்கியது.
இதைத் தொடா்ந்து, மற்ற மீனவா்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி விசைப்படகு கரைக்கு இழுத்து வரப்பட்டது.
இதனால் பல ஆயிரம் ரூபாய் சேதம் ஏற்பட்டிருப்பதாக படகின் உரிமையாளா் கருப்பையா தெரிவித்தாா்.