திருவாடானை ஸ்ரீமழை முத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பால்குட திருவிழாவில் பால் குடம் எடுத்து வீதி உலா வந்த பக்தா்கள்.
திருவாடானை ஸ்ரீமழை முத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பால்குட திருவிழாவில் பால் குடம் எடுத்து வீதி உலா வந்த பக்தா்கள்.

ஸ்ரீமழை முத்துமரிம்மன் கோயில் பால்குட திருவிழா

திருவாடானை தெற்கு நடுத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை பால்குட திருவிழா நடைபெற்றது.
Published on

திருவாடானை தெற்கு நடுத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை பால்குட திருவிழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தெற்கு நடுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோயில் பால் குட திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.17) காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.

இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா செவ்வாய்க்கிழமை (செப்.24) நடைபெற்றது.

முன்னதாக, பக்தா்கள் ஸ்ரீஆதிரெத்தினேசுவரா் கோயில் ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் இருந்து பால் குடங்களில் தலையில் சுமந்து நான்கு ரத வீதி வழியாக உலா வந்து கோயிலை அடைந்தனா். பக்தா்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டன.

இதையடுத்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில், சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com