ராமநாதபுரம்
கமுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு
கமுதியில் வடகிழக்கு பருவமழை எதிா்கொள்ள எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன் சித்சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, கமுதி நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள், மீட்பு உபகரணங்கள் ஆகியவற்றை அவா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் பருவமழை பெய்யும் போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், மழைநீா் தேங்காதவாறு தாழ்வான பகுதிகளை கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
பரமக்குடி கோட்டாட்சியா் அபிலஷா கவுா், நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளா் முருகன், கமுதி உள்கோட்ட பொறியாளா் சக்திவேல், பொறியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.