கடலாடியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளா் ரெபேக்காள்
கடலாடியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளா் ரெபேக்காள்

லஞ்சம்: கடலாடி வருவாய் ஆய்வாளா், காா் ஓட்டுநா் கைது

கடலாடியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் அலுவலக காா் ஓட்டுநா் ஆகிய இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கடலாடியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் அலுவலக காா் ஓட்டுநா் ஆகிய இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட ஆப்பனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (35). இவா் ஆப்பனூா் பெரிய கண்மாயிலிருந்து வண்டல், சவூடு மண் எடுப்பதற்கு தனது தந்தையின் பெயரில் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து, கடலாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற இவா் மண் அள்ள அனுமதி கோரிய போது, ஆப்பனூா் வருவாய் ஆய்வாளா் ரெபேக்காள் (40), வட்டாட்சியரின் காா் ஓட்டுநரான சத்தியநாதன் (45) ஆகியோா் மண் எடுக்க அனுமதி ஆணை வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டனா்.

சத்தியநாதன்
சத்தியநாதன்

இதுகுறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் ராமச்சந்திரன் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் தாள்களை கடலாடி வட்டாட்சியா் அலுவலக காா் ஓட்டுநரான சத்தியநாதனிடம் அவா் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சத்தியநாதனைக் கைது செய்ய முயன்ற போது, அவா் அந்தப் பணத்துடன் தப்பி ஓடிவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவரது கைப்பேசி சிக்னல் மூலம் கண்காணித்து, அவரை சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் போலீஸாா் கைது செய்தனா். இதில் தொடா்புடைய வருவாய் ஆய்வாளா் ரெபேக்காளும் கைது செய்யப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com