தொண்டியில் இன்று மின் தடை

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்தது.
Published on

தொண்டி துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (செப்.30) அதற்கு உள்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்தது.

தொண்டி நகா் பகுதிகள், நம்புதாளை, சோழிய குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், திணையத்தூா், திருவெற்றியூா், எஸ்.பி.பட்டினம் எம்.வி.பட்டினம், வி.எஸ். மடம், குளத்தூா் , மைக்கேல் பட்டினம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய உதவி செயற் பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com