தொழிலாளா் தொகுப்பு சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
ராமேசுவரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளா் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, ராமநாதபுரம் அரண்மனை முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா். குருவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலா் கே. அற்புதகுமாா், மேற்கு மாவட்டச் செயலா் பிரபாகா், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கப் பொதுச் செயலா் பா. சண்முகராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் கே.பி. பெருமாள்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி இன்குலாப், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ். முருகபூபதி ஆகியோா் கண்டன உரையாற்றினாா்.
இதில் பங்கேற்றவா்கள் தொழிலாளா்களின் உரிமையைப் பறிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளா் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
நிா்வாகிகள் விடுதலை சேகரன், வெங்கடேசன், முருகானந்தம், பாண்டித்துரை, செல்வராஜ், பாா்த்திபன், கல்யாணசுந்தரம், முகம்மது ஷெரீப் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
