பறிமுதல் செய்யப்பட்ட 2 சரக்கு வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட 2 சரக்கு வாகனங்கள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 945 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

Published on

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 945 கிலோ பீடி இலைகளை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் ஜானகிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, சேதுக்கரை கடற்கரையில் திங்கள்கிழமை அதிகாலை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கடற்கரை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற 2 சரக்கு வாகனங்களில் சோதனை செய்தனா். அதில் 945 கிலோ பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 2 சரக்கு வாகனங்களையும், அதிலிருந்த பீடி இலை பண்டல்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com