~

மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்!

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனா்.
Published on

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள வண்டல், வரவணி, செங்குடி, கூடலூா், ஆனந்தூா், நத்தகோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் நெல் விவசாயத்துக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு விளையும் மிளகாய் அதிக காரம் கொண்டதாக இருப்பதால் சந்தையில் இதற்கு அதிக கிராக்கி உண்டு. எனவே, இந்தப் பகுதி விவசாயிகள் தற்போது மிளகாய் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com