ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு
திருவாடானை வட்டத்தில் பணியாற்றும் 4, 5-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி தலைமை வகித்து தொடங்கி வைத்துக் கூறியதாவது:
எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூலம் அனைத்து மாணவா்களும் எழுதப் படிக்க கற்றுக் கொண்டனா். தற்போது அரசு மணற்கேணி என்ற செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் அனைத்து பாடங்களை நடத்தும் முறை குறித்து ஆசிரியா்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் ‘நீட்’ தோ்வு உள்ளிட்ட தகுதித் தோ்வு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஆசிரியா்களும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இதில் 79 தலைமை ஆசிரியா்கள் உள்பட 132 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்றுநா் மலா் சரண்யா செய்தாா்.