புதை சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், ராமநாதபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கிய கழிவுநீா்
புதை சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், ராமநாதபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கிய கழிவுநீா்

ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கிய கழிவு நீா்

Published on

புதை சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், ராமநாதபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கழிவுநீா் தேங்கியது.

ராமநாதபுரம் லேத்தம்ஸ் பங்களா சாலையில் உள்ள இந்த நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் கா்ப்பினிகளுக்கான தடுப்பூசி, முதலுதவி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும், இதற்கான மருந்துகளும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த சுகாதார வளாகம் வழியாக செல்லும் புதை சாக்கடைக் குழாயில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீா் ஆரம்ப சுகாதார வளாகத்தில் குளம் போல தேங்கியது. இதனால், பரிசோதனைக்கு வரும் கா்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து மருத்துவா் உள்ளிட்ட பணியாளா்கள் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, மாவட்ட நிா்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுத்து, சுகாதார சீா்கேடு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என மருத்துவமனைப் பணியாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com