தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் கைப்பற்றப்பட்ட 53 கிலோ கஞ்சா

தனுஷ்கோடியை அடுத்துள்ள ஒன்றாம் மணல் தீடையில் 53 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்களை இந்திய கடலோரக் காவல்படையினா் புதன்கிழமை கைப்பற்றினா்.
Published on

தனுஷ்கோடியை அடுத்துள்ள ஒன்றாம் மணல் தீடையில் 53 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்களை இந்திய கடலோரக் காவல்படையினா் புதன்கிழமை கைப்பற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஹோவா்கிராப்ட் கப்பலில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலோரக் காவல்படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஒன்றாம் மணல் தீடை பகுதியில் பொட்டலங்கள் கிடப்பதை பாா்த்த அவா்கள் அங்கு சென்று அவற்றைப் பிரித்து பாா்த்தனா். அதில், 53 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை மண்டபம் கடலோரக் காவல்படை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா். இந்த கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com