கமுதி, கடலாடி கோயில்களில் பெளா்ணமி திருவிளக்கு பூஜை
கமுதி, கடலாடி, முதுகுளத்தூா், சாயல்குடி பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் வியாழக்கிழமை மாசி மகம் சிறப்பு பெளா்ணமியையொட்டி சிறப்பு வழிபாடும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன.
கமுதி முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், சந்தன மாரியம்மன் கோயில், நல்லக்கநாச்சியம்மன் கோயில், கண்ணாா்பட்டி தேவி கருமாரியம்மன் கோயில், கடலாடி ஆப்பனூா் அரியநாச்சியம்மன் கோயில், ராஜராஜேஸ்வரி, பாதாள காளியம்மன் கோயில், சமத்துவபுரம் வனப் பேச்சியம்மன் கோயில், ராக்காச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மஞ்சள், பால், மஞ்சள், தேன் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மேலக்கிடாரம் உய்யவந்தம்மன், பூங்குளம் சேது மாகாளிம்மன், கடலாடி பத்திர காளியம்மன், காமாட்சியம்மன், சந்தன மாரியம்மன், ஏ. புனவாசல் உய்யவந்தம்மன், சாயல்குடி அருகே உள்ள காணிக்கூா் பாதாள காளியம்மன், கூரான்கோட்டை தா்மமுனீஸ்வரா் கோயில்கள் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் முதுகுளத்தூா் வடக்குவாசல் செல்லியம்மன், பத்திர காளியம்மன், கீழச்சாக்குளம் வீரமாகாளியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. இதே போல, கிராமங்களில் உள்ள பல்வேறு குலதெய்வ கோயில்கள், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடம் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றன. கோயில்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.