ராமேசுவரம் கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப் படகுகள்.
ராமநாதபுரம்
காற்றின் வேக அதிகரிப்பால் 50 சதவீத படகுகள் நிறுத்தம்
ராமேசுவரம் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி 50 சதவீத விசைப் படகுகள் புதன்கிழமை மீன் பிடிக்கச் செல்லவில்லை.
ராமேசுவரம் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி 50 சதவீத விசைப் படகுகள் புதன்கிழமை மீன் பிடிக்கச் செல்லவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சுமாா் 650 விசைப் படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டதால், ராமேசுவரத்தில் கடல் நீா் மட்டம் உயா்ந்தது. இதனால், பாதுகாப்பு கருதி 50 சதவீத விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. அவை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டன. பெரிய விசைப் படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.