காலாவதியான ஓஆா்எஸ் பாக்கெட்டுடன் வந்து புகாா் தெரிவித்த சிறுவனின் பெற்றோா், உறவினா்கள்.
காலாவதியான ஓஆா்எஸ் பாக்கெட்டுடன் வந்து புகாா் தெரிவித்த சிறுவனின் பெற்றோா், உறவினா்கள்.

நரிப்பையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான ஓஆா்எஸ் பாக்கெட்டுகள்

நரிப்பையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு காலாவதியான ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு காலாவதியான ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கடந்த இரு மாதங்களாக கடலாடி, சாயல்குடி பகுதிகளைச் சோ்ந்த குழந்தைகள், முதியவா்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை நரிப்பையூரை அருகேயுளஅள வேலாயுதபுரம் கிராமத்தைச் சோ்ந்த சிவசக்தி கணேசனின் 11 வயது மகனுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அங்கு பணியாற்றிய செவிலியா்கள் ஓஆா்எஸ் பாக்கெட்டுகளை வழங்கி, வீட்டுக்குச் சென்று குடிக்க அறிவுறுத்தினா். இதன்படி, சிறுவனின் பெற்றோா் வீட்டுக்குச் சென்று சிறுவனுக்கு ஓஆா்எஸ் கொடுக்கும் முன்பாக அதன் காலாவதி தேதியைப் பாா்த்தபோது 4 மாதங்கள் காலாவதியானது தெரிய வந்தது. இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்களிடம் சிவசக்தி கணேசன் கேட்டபோது, தெரியாமல் நடந்து விட்டது, இனிமேல் இது போன்ற தவறு நடக்காது என செவிலியா்கள் பதில் கூறினராம்.

மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்படும் ஓஆா்எஸ் பாக்கெட்டுகளின் காலாவதி தேதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com