அரசின் குறைகளை சுட்டிக்காட்டினால் கைது நடவடிக்கை: ஆா்.பி.உதயகுமாா் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால் திமுக அரசு கைது நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.
Published on

தமிழகத்தில் அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால் திமுக அரசு கைது நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவொரு பணியையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை.

மேலும், அமைச்சா் தலைமையில் மழையை எதிா்கொள்ள ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை. நீா்வழித் தடங்கள், கண்மாய்கள், ஊருணிகள் முழுமையாக தூா்வாரப்படாததால், பலத்த மழை பெய்தால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய ஆட்சியில் குறைகளை சுட்டிக் காட்டினால், திமுக அரசு கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.

பேட்டியின்போது, அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி மண்டலச் செயலா் சரவணன், மாணவரணி துணைத் தலைவா் செந்தில், நிா்வாகிகள் கஜேந்திரன், பி.ஜி.சேகா், நகா்மன்ற உறுப்பினா் சரவணன், மீனாட்சிசுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com