இலங்கைக் கடற்படையால் ராமேசுவரம் மீனவா்கள் 21 போ் கைது

கச்சத்தீவு அருகேமீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 21 பேரை 5 விசைப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

கச்சத்தீவு அருகேமீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 21 பேரை 5 விசைப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 339 விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் கச்சத்தீவு- தலைமன்னாா் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, 6 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன் பிடிக்கவிடாமல் விரட்டினா். மேலும், 21 மீனவா்களை 5 விசைப் படகுகளுடன் கைது செய்து மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com